கிரிக்கெட்

ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் பெங்களூரு அணி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை + "||" + IPL 2020, RR vs RCB Preview: Time for overseas stars to hold fort for struggling Royals against Kohli’s well-oiled unit

ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் பெங்களூரு அணி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் பெங்களூரு அணி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை
விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த அணி 8 ஆட்டத்தில் ஆடி 5-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி யும் ( சென்னை, பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கு எதிராக ), 5 தோல்வியும் கண்டு 6 புள்ளிகள் பெற்று பின்தங்கி இருக்கிறது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ஸ்டீவன் சுமித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ராகுல் திவேதியா என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (12 விக்கெட்) கலக்கி வருகிறார். ஸ்டீவன் சுமித், ராபின் உத்தப்பா, ஜோஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் சீராக செயல்படாதது அந்த அணிக்கு சறுக்கலை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் அந்த அணியின் ஒருங்கிணைந்த ஆட்டமும் மேலும் மேம்பட வேண்டியது அவசியமானதாகும்.

விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த அணி 8 ஆட்டத்தில் ஆடி 5-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூரு அணியின் பேட்டிங்கில் விராட்கோலி, தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ் ஆகியோர் வலு சேர்த்து வருகிறார்கள். மாயாஜால சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்) அசத்தி வருகிறார். வாஷிங்டன் சுந்தரும் கட்டுக்கோப்பாக பந்து வீசி நெருக்கடி அளிக்கிறார். உதனா, கிறிஸ் மோரிஸ் ஆகியோரும் பந்து வீச்சுக்கு பலம் அளிக்கிறார்கள். கடந்த லீக் ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) டிவில்லியர்சை பின்வரிசையில் களம் இறக்கியதுடன், பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தது பெங்களூரு அணிக்கு பாதகமாக அமைந்ததுடன் விமர்சனத்துக்கும் உள்ளானது.

கடைசி லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி டெல்லியிடமும், பெங்களூரு அணி பஞ்சாப்பிடம் வீழ்ந்தன. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று இருந்தது. அந்த நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களம் இறங்குவதுடன், அந்த அணிக்கு எதிரான ஆதிக்கத்தை நிலை நாட்ட அதிக தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் தலைகீழ் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் - பிரையன் லாரா விளக்கம்
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் தற்போதைய தலைகீழ் வீழ்ச்சிக்கான காரணத்தை மே.இ.தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
2. ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
5. ”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.