கிரிக்கெட்

டி வில்லியர்ஸ் அதிரடி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி + "||" + IPL Cricket: Royal Challengers Bangalore won by 7 wickets

டி வில்லியர்ஸ் அதிரடி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி

டி வில்லியர்ஸ் அதிரடி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
துபாய்,  

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 33வது ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் 57 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் பட்டிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் பிஞ்ச் 14(11) ரன்களும்,  பட்டிக்கல் 35(37) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நிலையில் 43(32) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக டி வில்லியர்ஸ் மற்றும் குருகீரத் சிங் அகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய டி வில்லியர்ஸ் எதிரணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

இறுதியில் அரைசதத்தை பதிவு செய்த டி வில்லியர்ஸ் 55(22) ரன்களும், குருகீரத் சிங் 19(17)ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி 19.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால், கார்த்திக் தியாகி மற்றும் தேவாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் தலைகீழ் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் - பிரையன் லாரா விளக்கம்
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் தற்போதைய தலைகீழ் வீழ்ச்சிக்கான காரணத்தை மே.இ.தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
2. ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
5. ”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.