கிரிக்கெட்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு + "||" + Pakistan fast bowler Omar Gul retires

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு பெற்றுள்ளார்.

கராச்சி, 

பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல் ராவல்பிண்டியில் நடந்து வரும் தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பலுசிஸ்தான் அணிக்காக விளையாடினார். அந்த அணி நேற்று முன்தினம் நடந்த தெற்கு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் 36 வயதான உமர் குல் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார். 

உமர் குல் 2003 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி 47 டெஸ்டில் 163 விக்கெட்டும், 130 ஒருநாள் போட்டியில் 179 விக்கெட்டும், 60 இருபது ஓவர் போட்டியில் 85 விக்கெட்டும் வீழ்த்தினார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கான அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் முதல் தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அபாரமான ‘யார்க்கர்’ பந்து வீச்சு மூலம் உமர் குல் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாகிஸ்தான் திரும்பினர்.
பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர்.
2. பாகிஸ்தானில் ராணுவம்- சிந்து மாகாண காவல் துறை இடையே பதற்றம்
பாகிஸ்தானில் ராணுவம் - போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் 10 உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலியானார்கள்
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்- இந்தியா தக்க பதிலடி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
5. 6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை... சாம்பல் பட்டியலில் தொடருமா?
பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்புக் அமைப்பின் 6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை சாம்பல் பட்டியலில் தொடருமா? விரைவில்முடிவு தெரியும்