கிரிக்கெட்

சென்னை வீரர் பிராவோ மீண்டும் காயம் + "||" + IPL 2020: Even if Dwayne Bravo is ruled out, Chennai Super Kings are unlikely to opt for a replacement, informs CSK CEO

சென்னை வீரர் பிராவோ மீண்டும் காயம்

சென்னை வீரர் பிராவோ மீண்டும் காயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ மீண்டும் காயம் அடைந்தார்.
சார்ஜா,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த பேட்டியில், ‘டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை வீச முடியாமல் போனதற்காக ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். ஆனால் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வலி அதிகமாக இருந்ததால் தான் வேறு வழியின்றி அவர் வெளியேறினார். 

காயம் காரணமாக அவர் சில நாட்களோ அல்லது ஓரிரு வாரங்களோ ஆட்டத்தை தவற விட வேண்டியது வரலாம்.’ என்றார். ஏற்கனவே கால் முட்டி காயத்தால் அவர் முதல் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை. தோல்விகளால் துவண்டு போய் உள்ள சென்னை அணிக்கு பிராவோவின் காயம் மேலும் ஒரு பேரிடியாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: வாழ்வா-சாவா போராட்டத்தில் சென்னை அணி
சென்னை அணியின் கேப்டன் டோனியின் மோசமான பேட்டிங்கே (9 ஆட்டத்தில் 136 ரன்) பின்னடைவுக்கு காரணமாக அமைகிறது.
2. ஐபிஎல் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்
ஷிகர் தவானின் அதிரடியான சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
3. டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது
4. ஐபிஎல் டி20 2020: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எத்ரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
5. தொடர் தோல்வி- அணுகுமுறையில் மாற்றம் தேவை: டோனி ஒப்புதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.