கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் தோனி அடுத்தடுத்து சாதனை + "||" + IPL Dhoni's successive record in the match

ஐ.பி.எல். போட்டியில் தோனி அடுத்தடுத்து சாதனை

ஐ.பி.எல். போட்டியில் தோனி அடுத்தடுத்து சாதனை
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி அடுத்தடுத்து சாதனைகளை படைத்து உள்ளார்.
அபுதாபி,

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகின்றன.  இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

போட்டியில் டாஸ் போடும்பொழுது டேனி மோரீசன், ஐ.பி.எல்.லில் தோனிக்கு இது 200வது போட்டி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் கூறினார்.
 
இதுபற்றி தோனி மோரீசனிடம் கூறும்பொழுது, நீங்கள் கூறிய பின்னரே அதுபற்றி (ஐ.பி.எல்.லில் 200வது போட்டி) எனக்கு தெரிய வந்தது.  நல்லது என்று உணர்கிறேன்.  ஆனால் அதேவேளையில், அது வெறும் எண்களே.  நீண்ட காலம் ஆக பல காயங்கள் ஏற்படாமல் விளையாடி வருகிறேன் என்பதே அதிர்ஷ்டவசம் என நான் உணர்கிறேன் என்று கூறினார்.

தோனி தனது ஐ.பி.எல். பயணத்தில், 2 அணிகளில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளார்.  ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  மற்றொன்று ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி (சென்னை அணி 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்ட காலத்தில்) ஆகும்.

இதன்பின்னர், போட்டியில் விளையாடிய தோனி மற்றொரு சாதனையையும் படைத்து உள்ளார்.  அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 4 ஆயிரம் ரன்களை பதிவு செய்துள்ளார்.  இதேபோன்று சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தனது 50வது கேட்ச்சை பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தினால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தும் போது அதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
2. ‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல என்றார்.
3. ‘ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும்’; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
4. ஐ.பி.எல். போட்டியில் இருந்து நடராஜன் விலகல்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
5. ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்துள்ளது.