கிரிக்கெட்

ஐ.பி.எல்.லில் 200வது போட்டி; தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து + "||" + 200th match in IPL; Suresh Raina congratulates Dhoni

ஐ.பி.எல்.லில் 200வது போட்டி; தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து

ஐ.பி.எல்.லில் 200வது போட்டி; தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து
ஐ.பி.எல்.லில் 200வது போட்டியை விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அபுதாபி,

ஐ.பி.எல்.லில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று களமிறங்கி விளையாடி இருக்கிறார்.  அவர் ஐ.பி.எல்.லில் 200வது போட்டியை விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி ரெய்னா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.பி.எல்.லில் 200வது போட்டியை விளையாடும் முதல் வீரர்.

எம்.எஸ். தோனி பாய்க்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்கட்டும்.  பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்.  நீங்கள் எப்பொழுதும் எங்களை பெருமையடைய செய்கிறீர்கள் என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும்; ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து
அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
2. கவர்னர் கிரண்பெடி, நாராயணசாமி தீபாவளி வாழ்த்து
கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
3. மியான்மர் தேர்தல்; வெற்றி பெற்ற சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கொண்டார்.
4. அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழா வாழ்த்து
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி கொண்டாடும் இந்து அமெரிக்க நண்பர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
5. இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்; போர் வீரர்களுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.