கிரிக்கெட்

இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என தோனி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது -ஸ்ரீகாந்த் + "||" + Young players have no Spark Dhoni's claim cannot be accepted Srikanth

இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என தோனி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது -ஸ்ரீகாந்த்

இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என தோனி  கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது -ஸ்ரீகாந்த்
தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.
சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில்  படுதோல்வியை சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப்-க்கான வாய்ப்பைஏறக்குறைய இழந்துவிட்டது. 

தோல்வி குறித்து தோனி கூறும் போது அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் களமிறக்கப்படுவார்கள். இனி வரும் போட்டிகளில் அவர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடலாம் என கூறினார்.

அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை என்ற தோனியின் கருத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ஸ்ரீகாந்த் இது குறித்து கூறும் போது இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என டோனி எப்படி கூற முடியும். ஜெகதீஷிடம் இல்லாத உத்வேகத்தையா கேதர் ஜாதாவிடமும், பியூஷ் சாவ்லாவிடமும் பார்த்து விட்டார். தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர் நடராஜன் : அவரது கதை அனைவருக்குமே முன் மாதிரி
வாழ்த்து மழையில் நனையும் நடராஜன் அவரது கதை அனைவருக்குமே ஒரு முன் மாதிரி என உருக்கமாக ஹர்திக் பாண்ட்யா கூறி உள்ளார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி:சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்கார‌ர் மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை கைப்பற்றினார்.
4. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார். தன்னை 10 வரும ஏமாற்றியதாக கூறி உள்ளார்.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்தி உள்ளது.