கிரிக்கெட்

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை எனக் கூறி விமர்சனத்துக்கு உள்ளாகும் தோனி + "||" + IPL 2020: Does Kedar Jadhav have spark? Kris Srikkanth tears into MS Dhoni’s CSK ‘youngsters’ comment

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை எனக் கூறி விமர்சனத்துக்கு உள்ளாகும் தோனி

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை எனக் கூறி விமர்சனத்துக்கு உள்ளாகும் தோனி
அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை என தோனி கூறியது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான  போட்டியில் படுதோல்வியை சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப்-க்கான வாய்ப்பைஏறக்குறைய இழந்துவிட்டது. 

தோல்வி குறித்து தோனி கூறும் போது அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் களமிறக்கப்படுவார்கள். இனி வரும் போட்டிகளில் அவர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடலாம் என கூறினார்.

அவரது இந்த பேட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சமூக  வலைத்தளங்களில் சென்னை அணி ரசிகர்களே மீம்ஸ் போட்டு தங்கள் அபிமான அணியை, குறிப்பாக கேப்டன் தோனியை கேலி செய்து  வருகின்றனர்.  அனுபவ வீரர்கள் சரியாக ஆடாவிட்டாலும் அவர்களை தொடர்ந்து ஆட வைத்துள்ளார். அதே சமயம் முரளி விஜய்க்கு போதிய வாய்ப்பு  அளிக்கப்படவில்லை.  மற்றொரு  அனுபவ வீரரான இம்ரான் தாஹிர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. 

இளம் வீரர்களுக்கும் தோனி சரியாக வாய்ப்பு தரவில்லை. ருதுராஜ் கெய்க்வாடுக்கு 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.  தமிழக வீரர்  நாரயணன் ஜெகதீசன்  கிடைத்த ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடியும் அடுத்த போட்டியில் நீக்கப்பட்டார். 

‘7.30 மணிக்கு மேல் அவரால் பேட்டிங்  செய்வது கடினம்’ என்று புது காரணம் ஒன்றையும் தோனி சொன்னார்.  இந்த ஆண்டு  சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் கலக்கிய தமிழக வீரர்  சாய் கிஷோருக்கு இன்னும் ஒரு வாய்ப்பை கூட தரவில்லை. இப்படி வாய்ப்பே கிடைக்காமல் பலர் இருக்கின்றனர்.

டோனியின் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தோனி  பிராசஸ்... பிராசஸ் என்று  சொல்வதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர் சொல்லும் பொடலங்கா கதையையெல்லாம்  ஏற்றுக் கொள்ள முடியாது. செயல்முறை பற்றி பேசும்  நீங்கள் செய்யும் வீரர்கள் தேர்வு மகா சொதப்பலாக இருக்கிறது. 

இளைஞர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கேட்டால் ஸ்பார்க் இல்லை  என்கிறீர்கள். ஜெகதீசனிடம் தீப்பொறி இல்லையா. அவரிடம் இல்லாத ஸ்பார்க்  ஜாதவிடம் இருக்கிறதா? இல்லை சாவ்லாவிடம் இருக்கிறதா?  தோனியின் கருத்து தவறானது. இனிமேல் இளைஞர்களுக்கு  ஸ்பார்க் இருக்கிறதா பார்ப்போம் என்கிறார். ஜெகதீசன் வாய்ப்பு கிடைத்த ஒரு  போட்டியிலும் நன்றாகதானே விளையாடினார். அப்போது ஸ்பார்க் தெரியவில்லையா’ என்று கடுமையாக தாக்கி உள்ளார்.

20 ஓவர் போட்டி விளையாட்டு. உலக கோப்பையில் இந்திய அணியை இளம் வீரர் தோனி வழி நடத்தட்டும்’என்று 2007ல் சச்சின், சேவக்,  டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் பெருந்தன்மையுடன் விலகி வழிவிட்டதையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். தோனியின் அணுகுமுறையில் இனியாவது மாற்றம் இருக்குமா என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. வாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர் நடராஜன் : அவரது கதை அனைவருக்குமே முன் மாதிரி
வாழ்த்து மழையில் நனையும் நடராஜன் அவரது கதை அனைவருக்குமே ஒரு முன் மாதிரி என உருக்கமாக ஹர்திக் பாண்ட்யா கூறி உள்ளார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி:சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்கார‌ர் மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை கைப்பற்றினார்.
4. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார். தன்னை 10 வரும ஏமாற்றியதாக கூறி உள்ளார்.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்தி உள்ளது.