கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி; ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IPL Competition; Hyderabad won by 8 wickets

ஐ.பி.எல். போட்டி; ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். போட்டி; ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 40வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். ஜேசன் ஹோல்டர் வீசிய 4வது ஓவரில் ராபின் உத்தப்பா (19 ரன்கள்) ரன் அவுட் ஆனார். அடுத்த விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

ரஷீத் கான் வீசிய 13வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ்(30 ரன்கள்) பவுல்ட் ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 9 ரன்களில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் 19 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் அணியின் ரன் வேகம் குறைந்தது.

ரியான் பராக் 2 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.  ராகுல் திவதியா(2 ரன்கள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்சர்(16 ரன்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 
இதனை தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் (4) மற்றும் பேர்ஸ்டோ (10) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினர்.

எனினும், அடுத்து விளையாடிய மணீஷ் பாண்டே நின்று ரன்களை குவிக்க தொடங்கினார்.  அவரது ஆட்டத்தில் 8 சிக்சர்கள் பறந்தன.  4 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.  ஆட்டம் இறுதி வரை விளையாடிய அவர் 83 (47 பந்துகள்) ரன்கள் எடுத்துள்ளார்.  விஜய் சங்கர் 52 (51 பந்துகள் 6 பவுண்டரிகள்) எடுத்துள்ளார்.  இருவரும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஐதராபாத் அணி 156 ரன்களை எடுத்தது.  இதனால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தினால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தும் போது அதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
2. ‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல என்றார்.
3. 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ்
காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியை 10 ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
4. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
5. விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி
போடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதிக வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை