கிரிக்கெட்

ஐ.பி.எல். 2020: 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை + "||" + IPL 2020: Chennai lost 4 wickets for 3 runs

ஐ.பி.எல். 2020: 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை

ஐ.பி.எல். 2020: 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை
மும்பைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.


இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். காயம் காரணமாக பிராவோ விலகியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் முதல் முறையாக தாஹிருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆட்டம் சென்னைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஓவரிலேய அந்த எதிர்பார்ப்பு தகர்ந்தது. ட்ரெண்ட் பவுல்ட் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்(0 ரன்) எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார்.

பும்ரா வீசிய 2வது ஓவரில் நாராயணன் ஜெகதீசன்(0 ரன்), அம்பத்தி ராயுடு(2 ரன்கள்) இருவரும் அவுட் ஆகி வெளியேறினர். டுப்ளீசிஸ்(1 ரன்) 3வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இன்றைய ஆட்டம் சென்னை அணியின் மிக மோசமான ஆட்டமாக பதிவாகியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். 2020: ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - பெங்களூரு அணி வெளியேறியது
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. ஐ.பி.எல். 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
3. ஐ.பி.எல். 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
4. ஐ.பி.எல். 2020: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
சென்னைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 172 ரன்கள் குவித்தது.
5. ஐ.பி.எல். 2020: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.