கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி; மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IPL Competition; Mumbai Indians won by 10 wickets

ஐ.பி.எல். போட்டி; மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். போட்டி; மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இந்த ஆட்டம் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். காயம் காரணமாக பிராவோ விலகியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆட்டம் சென்னைக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஓவரிலேய அந்த எதிர்பார்ப்பு தகர்ந்தது. ட்ரெண்ட் பவுல்ட் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்(0 ரன்) எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

பும்ரா வீசிய 2வது ஓவரில் நாராயணன் ஜெகதீசன்(0 ரன்), அம்பத்தி ராயுடு(2 ரன்கள்) இருவரும் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர். டுப்ளீசிஸ்(1 ரன்) 3வது ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய ஜடேஜா(7 ரன்கள்) ட்ரெண்ட் பவுல்ட் வீசிய 6வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் டோனி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி சற்று நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் 7வது ஓவரில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் கேட்ச் ஆகி 16 ரன்களுடன் நடையை கட்டினார்.

இதற்கடுத்து களமிறங்கிய சாம் கரன் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். மறுமுனையில் தீபக் சாஹர்(0 ரன்) ஷர்துல் தாக்கூர்(11 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் சென்னை அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது.

இந்த தொடரில் முதல் முறையாக களமிறங்கிய இம்ரான் தாஹிர் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ட்ரெண்ட் பவுல்ட் வீசிய 20வது ஓவரின் கடைசி பந்தில் சாம் கரன்(47 பந்துகள் 52 ரன்கள்) பவுல்ட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 114 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து மும்பை அணி 115 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் 46 (37 பந்துகள் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) மற்றும் இஷான் கிஷன் 68 (37 பந்துகள் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) ரன்கள் எடுத்தனர்.  அந்த அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்களை எடுத்தது.  இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல என்றார்.
2. 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ்
காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியை 10 ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
3. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
4. விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி
போடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதிக வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
5. பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்
பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்.