கிரிக்கெட்

ஐபிஎல் தொடர்: லீக் சுற்றோடு சிஎஸ்கே வெளியேற்றம்- சாக்‌ஷி டோனி உருக்கமான பதிவு + "||" + It's Just A Game...": MS Dhoni's Wife Sakshi Posts Heartfelt Poem As CSK Miss Out On IPL 2020 Playoff Spot

ஐபிஎல் தொடர்: லீக் சுற்றோடு சிஎஸ்கே வெளியேற்றம்- சாக்‌ஷி டோனி உருக்கமான பதிவு

ஐபிஎல் தொடர்: லீக் சுற்றோடு  சிஎஸ்கே வெளியேற்றம்- சாக்‌ஷி டோனி உருக்கமான பதிவு
இது ஒரு விளையாட்டு! யாரும் தோற்க விரும்புவதில்லை என சாக்‌ஷி டோனி பதிவிட்டுள்ளார்.
ராஞ்சி,

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் இரு போட்டிகளில் சம்பிரதாய ஆட்டமாகவே சென்னை அணி விளையாட உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவது இதுதான் முதல் தடவையாகும்.

சென்னை அணி வெளியேற்றப்பட்ட நிலையில் , அந்த அணியின் கேப்டன் டோனியின் மனைவி சாக்‌ஷி டோனி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சாக்‌ஷி டோனி கூறியிருப்பதாவது:- “

இது ஒரு விளையாட்டு. நீங்கள் சிலவற்றை வென்றால் சிலவற்றை இழக்கிறீர்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோற்கிறார்கள், மற்றவர்கள் தவற விடுகிறார்கள். இது ஒரு விளையாட்டு! விளையாட்டுத்திறனின் சாரத்தை வெல்லாமல் உணர்ச்சிகளை அனுமதிக்கவும். இது ஒரு விளையாட்டு! யாரும் இழக்க விரும்பவில்லை, ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது! அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
5. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.