தன் பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு டோனி உருக்கமான நன்றி! + "||" + MS Dhoni reacts after die-hard CSK fan paints his house in Chennai Super Kings colours
தன் பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு டோனி உருக்கமான நன்றி!
டோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் டோனியின் படத்தை வரைந்து அசத்தினார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் அவர் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் டோனியின் படத்தை வரைந்து அசத்தினார். சமூக வலைத்தளங்களில் வைரலாக சென்றது.
இந்த நிலையில், டோனியின் கவனத்தையும் இந்த பதிவு பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனி இது பற்றி கூறியிருப்பதாவது:- நான் அதை இன்ஸ்டாகிராமில் பார்த்திருந்தேன். இது என்னை சார்ந்தது மட்டும் அல்ல. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய ரசிகர் என்பதையும் நிரூபித்துள்ளார்.
இது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போஸ்ட் அல்ல இது. காலத்தால் அழிக்க முடியாதது. அவரது குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் தான் இதை அவர் செய்திருக்க முடியும். அதனால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.