கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி + "||" + IPL Cricket: Sunrisers Hyderabad won by 88 runs

ஐ.பி.எல். கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய 47வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. 

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக விருத்திமான் சகா 87(45) ரன்களும், கேப்டன் டேவிட் வார்னர் 66(34) ரன்களும், மணீஷ் பாண்டே 44(31) ரன்களும் எடுத்தனர். 

பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய ரஹானே மற்றும் ஷிகார் தவான் ஜோடியில், தவான் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 5(6) ரன்களும், ஹெட்மயர் 16(13) ரன்களும், ரஹானே 26(19) ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 7(12) ரன்களும், அக்‌ஷர் படேல் 1(4) ரன்னும், ரபாடா 3(7) ரன்னும், நிதானமாக ஆடிய ரிஷாப் பாண்ட் 36(35) ரன்களும், ஆர்.அஸ்வின் 7(5) ரன்களும், நார்ட்ஜ் 1(3) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தேஷ் பாண்டே 20(9) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் டெல்லி அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 3 விக்கெட்டுகளும், நடராஜன், சந்திப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹொல்டர், நதீம் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்?
அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.