கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்: ஜஸ்ப்ரீத் பும்ராவின் புதிய மைல்கல் + "||" + 100 IPL wickets: Jaspreet Bhumra's new milestone

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்: ஜஸ்ப்ரீத் பும்ராவின் புதிய மைல்கல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்: ஜஸ்ப்ரீத் பும்ராவின் புதிய மைல்கல்
இன்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மும்பை பந்துவீச்சாளர் பும்ரா புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய 48வது ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.


மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேவ்தத் படிக்கல்(74 ரன்கள்), விராட் கோலி(9 ரன்கள்) மற்றும் ஷிவம் துபே(2 ரன்கள்) ஆகிய மூவரும் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்ப்ரீத் பூம்ரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். பும்ராவின் முதல் ஐ.பி.எல். விக்கெட்டும் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்?
அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.