கிரிக்கெட்

ஐ.பி.எல். 2020: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IPL 2020: Mumbai Indians won by 5 wickets

ஐ.பி.எல். 2020: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். 2020: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய 48வது ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பிலிப் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஜோஸ் பிலிப் 33(24) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 9(14) ரன்களும், டி வில்லியர்ஸ் 15(12) ரன்களும், ஷிவம் துபே 2(6) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


மறுமுனையில் அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த நிலையில், 74(45) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் 4(2) ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 10(6) ரன்களும், குர்கீரத் சிங் 14(11) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், போல்ட், ராகுல் சாஹர், பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக்18(19) மற்றும் இஷான் கிஷன் 25(19) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. இந்நிலையில் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார்.

மறுமுனையில் சவுரப் திவாரி 5(8), க்ருனால் பாண்டியா 10(10), ஹர்திக் பாண்டியா 17(15) ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்தாலும் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடி 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இறுதியாக 19.1 ஓவர்களில் 166 ரன்கள் குவித்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியின் சாதனை நழுவியது
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 76-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டிடம் (கவுகாத்தி) அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 7-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 6-வது வெற்றி
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி அபார வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். 2020: ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - பெங்களூரு அணி வெளியேறியது
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.