கிரிக்கெட்

ஐ.பி.எல். 2020: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா + "||" + IPL 2020: Kolkata set a target of 173 for Chennai

ஐ.பி.எல். 2020: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா

ஐ.பி.எல். 2020: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
சென்னைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 172 ரன்கள் குவித்தது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 49வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மார்கன் தலைமையினான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.


இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் இன்று டு ப்ளிசிஸ், இம்ரான் தாஹிருக்கு பதிலாக சேன் வாட்சன், லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளனர். ப்ளே ஆஃப் வாய்ப்பை சென்னை அணி ஏற்கனவே இழந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் அதிக மதிப்பெண்களை பெறும் முனைப்புடன் கொல்கத்தா அணி இன்று களம் காண்கிறது.

கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். பவர்-ப்ளே முடியும் வரை விக்கெட்டுகளை இழக்காமல் இருவரும் பேட்டிங் செய்து வந்த நிலையில், 8வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. கரண் சர்மா வீசிய பந்தில் ஷுப்மன் கில்(26 ரன்கள்) பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சுனில் நரேன்(7 ரன்கள்) சாண்ட்னர் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டிய நிதிஷ் ராணா 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசினார். கரண் சர்மா வீசிய 16வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். லுங்கி இங்கிடி வீசிய 18வது ஓவரில் நிதிஷ் ராணா(87 ரன்கள், 61 பந்துகள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

ரிங்கு சிங் 11 ரன்களிலும், கேப்டன் இயன் மார்கன் 15 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக்(21 ரன்கள்) மற்றும் ராகுல் திரிபாதி(3 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து சென்னை அணி தற்போது 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புரெவி புயல் எதிரொலி; சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து
புரெவி புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா அணிகள் இன்று மோதல்
இன்றைய ஐ.எஸ்.எல். கால்பந்து ஆட்டத்தில் சென்னை-கேரளா அணிகள் மோதுகின்றன.
3. அடுத்த 6 மணிநேரம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த 6 மணிநேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. ஐ.பி.எல். 2020: ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - பெங்களூரு அணி வெளியேறியது
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.