கிரிக்கெட்

டோனி ஃபார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்; சங்கக்காரா அறிவுரை + "||" + Sangakkara has advice for Dhoni to get back in form ahead of IPL 2021

டோனி ஃபார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்; சங்கக்காரா அறிவுரை

டோனி ஃபார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்; சங்கக்காரா அறிவுரை
கேப்டன் டோனி ஃபார்மில் இல்லாததே இந்த சீசனில் சி.எஸ்.கே.வின் சறுக்கலுக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற உள்ளது.  சென்னை அணியின் கேப்டன் டோனியும் தனது வழக்கமான அதிரடியை காட்ட முடியாமல் திணறி வருகிறார். 

கேப்டன் டோனி ஃபார்மில் இல்லாததே இந்த சீசனில் சி.எஸ்.கே.வின் சறுக்கலுக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா டோனி சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவர் கூறுகையில்,

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனுக்கும் அடுத்த சீசனுக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. இப்படி நீண்ட காலத்திற்கு விளையாடாமல் இருப்பது நல்லதல்ல.  சில கிரிக்கெட் தொடரில் விளையாடி டோனி தனது ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். 

ஒரு வீரர் ஃபார்மில் இல்லாததும் ஃபார்முக்கு திரும்புவதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். ஆனால் ஒரு சில வீரர்களின் செய்திதான் பெரிதாக பேசப்படும். ஐபிஎல் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் தொடர்களில் டோனி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு டோனி தலைமை தாங்குவாரா? சிஎஸ்கே சிஇஓ பேட்டி
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முழுமையாக மாற்றி அமைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
2. தன் பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு டோனி உருக்கமான நன்றி!
டோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் டோனியின் படத்தை வரைந்து அசத்தினார்.
3. இந்த ஆண்டு எங்களுக்கானதாக அமையவில்லை - தோல்விக்குப் பிறகு டோனி பேட்டி
நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பலாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
4. நடுவரின் முடிவை மாற்றும் வகையில் டோனி நடந்து கொண்டாரா?
ஷர்துல் தாகூர் வீசிய பந்து ஒன்று ஆஃப் சைடில் ஓரமாகச் சென்றது. அதை ரஷித் கானால் அடிக்க முடியவில்லை.
5. ஐபிஎல் தொடர்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு 197 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.