ரோகித் சர்மா உடல் தகுதியை நாளை ஆய்வு செய்கிறது பிசிசிஐ மருத்துவக் குழு


ரோகித் சர்மா உடல் தகுதியை நாளை ஆய்வு செய்கிறது பிசிசிஐ மருத்துவக் குழு
x
தினத்தந்தி 31 Oct 2020 11:28 AM GMT (Updated: 31 Oct 2020 11:28 AM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாடவில்லை

மும்பை,

ரோகித் சர்மாவின்  உடற்தகுதி குறித்து பிசிசிஐ மருத்துவக் குழுவினர் நாளை பரிசோதனை  செய்ய உள்ளது.  இந்த பரிசோதனைக்கு பின் ஆஸ்திரேலியத் தொடருக்கு பிற்பகுதியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதா அல்லது நீண்ட ஓய்வு தேவைப்படுமா என்பதை பிசிசிஐ அறிவிக்கும் எனத்தெரிகிறது. 

கடந்த 18-ம் தேதி நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கடைசியாக ரோகித் சர்மா விளையாடினார். இரு சூப்பர் ஓவர்கள் வரை சென்று மும்பை அணி தோற்றது. அந்தப் போட்டியின் 2-வது சூப்பர் ஓவரின்போது ரோஹித் சர்மாவுக்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.  இந்திய அணி வரும் நவம்பர் 27 ஆம் தேதி ஆஸ்திரேலியே சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா சேர்க்கப்படாதது பலருக்கு வியப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் உடல் தகுதி குறித்து மீண்டும் பிசிசிஐ நாளை ஆய்வு செய்ய உள்ளது. 

பிசிசிஐ மூத்த அதிகாரி இவ்விவகாரம் குறித்து  கூறுகையில் ' ரோகித் சர்மா உடல் நிலை குறித்து நவம்பர் 1-ம் தேதி பிசிசிஐ மருத்துவக் குழுவினர் அவரை ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வுக்குப்பின் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்த விவரம் தெரிந்துவிடும்.

பொதுவாக தொடைப்பகுதியின் பின்பகுதியில் கிரேடு-2 தசைநார் கிழிவு ஏற்பட்டால் கூட வழக்கமான ஷாட்களையும் விளையாடுவதிலும் சிரமம் இருக்காது. ஆனால், விக்கெட்டுகளுக்கு இடையே விரைவாக ரன்களை ஓடி எடுப்பதில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்” என்றார். 

Next Story