கிரிக்கெட்

ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்; பிளெஸ்சிஸ் பேட்டி + "||" + Rudraj gaikwad acts like young Virat Kohli; Plessis

ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்; பிளெஸ்சிஸ் பேட்டி

ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்; பிளெஸ்சிஸ் பேட்டி
சென்னை அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார் என்று அணியின் மற்றொரு வீரரான பிளெஸ்சிஸ் பேட்டியில் கூறியுள்ளார்.
அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 55வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடின.

இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்த நிலையில், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.  20 ஓவர்களில் 6   விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து எளிதில் வெற்றி பெற்றது.  சென்னை அணியில் ருதுராஜ் ஆட்டமிழக்காமல் விளையாடி 62 ரன்கள் எடுத்தது வெற்றி பெற பெரிதும் உதவியது.

இதுபற்றி பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில், இந்த சீசன் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது.  ஆனால் நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம்.  எங்களுடைய அணியில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்.

நெருக்கடியான நேரத்தில் நின்று விளையாடுகிறார் என எனக்கு தோன்றுகிறது.  இளம் வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இதுபோன்ற தகுதிகளே தேவையாக உள்ளது.  எனக்குள் கிரிக்கெட் பொதிந்து கிடக்கிறது.  அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாஸ்டேக் உதவியால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிப்பு; மத்திய மந்திரி கட்காரி
பாஸ்டேக் உதவியால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி கட்காரி கூறியுள்ளார்.
2. காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்
சத்தீஷ்காரில் காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
3. இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும்: மத்திய மந்திரி உரை
இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
4. உத்தரகாண்டில் பனிச்சரிவு; 26 உடல்கள் மீட்பு, 171 பேர் மாயம்: டி.ஜி.பி. பேட்டி
உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என டி.ஜி.பி. பேட்டியில் கூறியுள்ளார்.
5. பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள், போதை பொருள் சப்ளை: பயங்கரவாத அமைப்பின் தளபதி திடுக் தகவல்
பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன என கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தளபதி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.