ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
சார்ஜா,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.
9 வெற்றிகளுடன் கம்பீரமாக முதலிட அரியணையில் அமர்ந்திருக்கும் மும்பை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே சமயம் 6 வெற்றி, 7 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் உள்ள ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது.
இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் (+0.555) வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும். சறுக்கினால் வெளியேற வேண்டியது தான். ஐதராபாத் அணி தோற்றால் தான் கொல்கத்தாவுக்கு பிளே-ஆப் வாய்ப்பு கிட்டும் என்பதால் மும்பையின் வெற்றிக்காக கொல்கத்தா ரசிகர்கள் பிரார்த்திப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.