கிரிக்கெட்

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம் + "||" + Sandeep, Nadeem keep MI down to 149/8

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக  150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
சார்ஜா,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணி பிளே ஆப் சுற்றை எட்டியதல் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாடாமல் இருந்த ரோகித் சர்மா, இன்றைய போட்டியில் களம் இறங்கினார். எந்த நெருக்கடியும் இன்றி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 8  விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்துள்ளது. இதையடுத்து, 150- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது.

9 வெற்றிகளுடன் கம்பீரமாக முதலிட அரியணையில் அமர்ந்திருக்கும் மும்பை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.  அதே சமயம் 6 வெற்றி, 7 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் உள்ள ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது.  இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் (+0.555) வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும். சறுக்கினால் வெளியேற வேண்டியது தான். ஐதராபாத் அணி தோற்றால் தான் கொல்கத்தாவுக்கு பிளே-ஆப் வாய்ப்பு கிட்டும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
4. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.
5. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்யும்.