கிரிக்கெட்

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் தொடரில் 600 ரன்களை கடந்த ஷிகர் தவான் + "||" + IPL Shikhar Dhawan completed 600 runs in the 2020 IPL cricket

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் தொடரில் 600 ரன்களை கடந்த ஷிகர் தவான்

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் தொடரில் 600 ரன்களை கடந்த ஷிகர் தவான்
இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான் 600 ரன்களைக் கடந்துள்ளார்.
அபுதாபி,

அபுதாபியில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

இந்த ஜோடியின் அதிரடியான துவக்கத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 38(27) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். களத்தில் அதிரடி காட்டிய ஷிகர் தவான் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். 

இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாசிய ஷிகர் தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதன் பிறகு சந்தீப் சர்மா வீசிய பந்தில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் சேர்த்து கே.எல்.ராகுல்(670) முதல் இடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலம் ஷிகர் தவான் 600 ரன்களை கடந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மொத்தம் 192 ஆட்டங்களில் விளையாடி 5,878 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருந்த தவான் இன்றைய ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மாவை(5,162 ரன்கள்) பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு(5,182 ரன்கள்) முன்னேறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
2. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: 219 ரன்கள் குவித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்
டெல்லிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 219 ரன்கள் குவித்துள்ளது.
3. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி
ஐதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
4. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் பஞ்சாப் அணி 126 ரன்கள் எடுத்துள்ளது.
5. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.