ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + IPL Cricket Final: Mumbai Indians set a target of 157 for victory
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துபாய்,
13-வது ஐ.பி.எல். சீசனின் இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். துவக்கமே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலாவதாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறக்கிய ரஹானேவும் 2(4) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷிகர் தவானும் 15(13) ரன்களில் இன்று களமிறக்கப்பட்ட ஜெயந்த் யாதவ் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் டெல்லி அணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியால் ரன் ரேட் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியில் சிறப்பாக ஆடிய ரிஷாப் பண்ட் 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 56(38) ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 5(5) ரன்களும், அக்ஷர் பட்டேல் 9(9) ரன்களும், ரபாடா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 65(50) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும், நாதன் கவுல்டர் நிலே 2 விக்கெட்டுகளும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் அணியில் சுமித்தும், பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.