கிரிக்கெட்

13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...! + "||" + IPL 2020 Final: KL Rahul wins Orange Cap, Kagiso Rabada seals Purple Cap

13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!

13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
அபுதாபி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.  ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு சீசனில் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 
  • அதிக ரன்கள் அடித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி -  கேஎல் ராகுல் (14 போட்டிகளில் 670 ரன்கள்)
  • அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பி: ரபாடா (30 விக்கெட்டுகள்) 
  • வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) - தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி)
  • ஃபேர் பிளே விருது -  மும்பை அணி 
  • கேம் சேஞ்சர் விருது - கேஎல் ராகுல் (பஞ்சாப்) 
  • சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - பொல்லார்டு (மும்பை)
  • அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது - இஷான் கிஷண் - (மும்பை- 30 சிக்சர்)
  • பவர் பிளேயர் விருது - டிரெண்ட் போல்ட் (மும்பை)
  • மதிப்பு மிகுந்த வீரர் - ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)


தொடர்புடைய செய்திகள்

1. பேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் : மேக்ஸ்வெல் டுவிட்
ஆஸ்திரேலிய அணி 66- ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்த மேக்ஸ்வேலின் அதிரடி ஆட்டமும் முக்கிய காரணியாக இருந்தது.
2. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
3. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
5. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.