கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்; ராகுல் டிராவிட் + "||" + IPL The number of competing teams will increase; Rahul Dravid

ஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்; ராகுல் டிராவிட்

ஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்; ராகுல் டிராவிட்
ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை வருகிற 2021ம் ஆண்டில் 8ல் இருந்து 9 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  இந்த எண்ணிக்கை வரும் 2023ம் ஆண்டில் 10 ஆகவும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நீண்டகால திட்டம் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனரான ராகுல் டிராவிட் கூறும்பொழுது, திறமை அடிப்படையில் விரிவாக்கத்திற்கு ஐ.பி.எல். தயாராகி வருகிறது என நான் உணர்கிறேன்.

நிறைய திறமையான வீரர்கள் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர்.  நிறைய அணிகள் இருக்கும்பொழுது, அனைத்து திறமையான வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள்.  தரத்திலும் குறைவு இருக்காது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. "800" பட விவகாரம்; கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது: சரத்குமார் அறிக்கை
கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
2. தோனி ஓர் அபாயகரமான வீரர்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது தோனி தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
3. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அத்தொகுதி எம்.பி. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
4. கொரோனாவுக்கு பரிந்துரைக்கும் மருந்து இருதய கோளாறுகளை அதிகரிக்கும்; அதிர்ச்சி தகவல் வெளியீடு
கொரோனா வைரசின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அசித்ரோமைசின் மருந்து இருதய கோளாறுகளை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
5. ஜே.இ.இ. முதன்மை தேர்வு: விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் எழுதினார்கள்; மத்திய மந்திரி தகவல்
ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.