கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன் + "||" + Cricketer Natarajan Begins his training

ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்

ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட்  வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஐபிஎல் 2020-இல் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். யார்க்கர் பந்துகளை கச்சிதமாக வீசிய நடராஜன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் பலனாக  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், வலைப் பயிற்சியின்போது இந்திய அணி வீரர்களுக்கு நடராஜன் பந்துவீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

விடியோவுடன் பிசிசிஐ-யின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"நடராஜன் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக பந்துவீசியதை நாம் பார்த்தோம். இந்திய அணிக்கு முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவர் இந்திய அணிக்கு முதன்முறையாக பந்துவீசுகிறார். கனவு நனவான தருணம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
2. கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
5. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.