பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் கராச்சி அணி


பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் கராச்சி அணி
x
தினத்தந்தி 15 Nov 2020 8:46 PM GMT (Updated: 15 Nov 2020 8:46 PM GMT)

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லீக் சுற்றுடன் கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு ‘பிளே-ஆப்’ சுற்று கராச்சியில் தொடங்கியுள்ளது.

கராச்சி, 

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லீக் சுற்றுடன் கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு ‘பிளே-ஆப்’ சுற்று கராச்சியில் தொடங்கியுள்ளது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முல்தான் சுல்தான்ஸ்- கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த முல்தான் அணி 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய கராச்சி அணியில் பாபர் அசாம் 65 ரன்கள் (53 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். கடைசி கட்டத்தில் தடுமாறிய கராச்சி அணிக்கு இறுதி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. இதில் முதல் 5 பந்தில் ஒரு விக்கெட்டை இழந்து 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி பந்தில் கராச்சி வீரர் இமாத் வாசிம் பவுண்டரி அடித்தார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கராச்சியின் ஸ்கோரும் 8 விக்கெட்டுக்கு 141 ரன்களுடன் நின்றதால் சமன் (டை) ஆனது. இதன் பின்னர் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கராச்சி அணி 2 விக்கெட்டையும் இழந்து 13 ரன் எடுத்தது. அடுத்து 14 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய முல்தான் அணி 9 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கராச்சி அணி இறுதிஆட்டத்தில் லாகூர் குலாண்டர்ஸ், முல்தான் சுல்தான்ஸ் ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.

Next Story