இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள், 20 ஓவர் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது


இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள், 20 ஓவர் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது
x
தினத்தந்தி 20 Nov 2020 8:27 PM GMT (Updated: 20 Nov 2020 8:27 PM GMT)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

சிட்னி, 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது மற்றும் 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் முறையே வருகிற 27, 29-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் டிசம்பர் 2-ந் தேதியும், முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் டிசம்பர் 4-ந் தேதியும், 2-வது மற்றும் 3-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் முறையே டிசம்பர் 6, 8-ந் தேதியும் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17-ந் தேதி தொடங்குகிறது. ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள், 20 ஓவர் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. ஒரே நாளுக்குள் முதல் ஒருநாள் போட்டி தவிர எஞ்சிய 5 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்து விட்டன. முதலாவது ஒருநாள் போட்டிக்கு மட்டும் இன்னும் சுமார் 2 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகாமல் உள்ளன. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டி தொடரில் போட்டி நடைபெறும் மைதானத்தின் மொத்த இருக்கை வசதியில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story