கிரிக்கெட்

டெஸ்ட் தொடர்: ரோகித், இஷாந்த் சர்மா 4 நாட்களில் ஆஸ்திரேலியா வரவேண்டும்; அணி பயிற்சியாளர் + "||" + Test series: Rohit, Ishant Sharma to return to Australia in 4 days; Team coach

டெஸ்ட் தொடர்: ரோகித், இஷாந்த் சர்மா 4 நாட்களில் ஆஸ்திரேலியா வரவேண்டும்; அணி பயிற்சியாளர்

டெஸ்ட் தொடர்:  ரோகித், இஷாந்த் சர்மா 4 நாட்களில் ஆஸ்திரேலியா வரவேண்டும்; அணி பயிற்சியாளர்
ரோகித் மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் போட்டியில் பங்கேற்க 4 நாட்களில் ஆஸ்திரேலியா வரவேண்டும் என அணி பயிற்சியாளர் கூறியுள்ளார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 11ந்தேதி இரவு துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.  கோலி முதல் டெஸ்டில் மட்டுமே விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை தொடங்கியுள்ளார்.  இதேபோன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த ஷர்மாவும் தேசிய அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

எனினும், இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.  ஆனால், டிசம்பர் 11ந்தேதி இரு அணிகளுக்கு இடையே வார்ம்-அப் போட்டிகள் நடைபெறும்.

அதனால், டிசம்பர் 10ந்தேதியுடன் தனிமைப்படுத்துதலை அவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டும்.  அதற்கு அவர்கள் இருவரும் வருகிற 26ந்தேதி ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும்.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறும்பொழுது, நீண்ட காலம் ரோகித் ஓய்வில் இருக்க முடியாது.  டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டுமென்றால், 3 அல்லது 4 நாட்களில் விமானம் ஏறி ஆஸ்திரேலியா வரவேண்டும்.  அப்படி இல்லையெனில் அவர் விளையாடுவது கடினம்.  இதேபோன்று இஷாந்த் சர்மாவும் 4 நாட்களில் கிளம்பி வரவேண்டும் என கூறியுள்ளார்.