கிரிக்கெட்

ஐபிஎல் போட்டி: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் + "||" + BCCI’s IPL card: revenue Rs 4,000 cr, TV viewership up, 30,000 Covid tests

ஐபிஎல் போட்டி: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்

ஐபிஎல் போட்டி:  இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்
ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
மும்பை

இந்தியாவில் கடுமையான கொரோனா  கட்டுப்பாடுகள் இருந்ததால்  2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள்  செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன. 

 இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் வெளியிட்டு உள்ள தகவல் படி   ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  நடைபெற்ற ஐபிஎல் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம்  ரூ .4,000 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை “கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. 60 போட்டிகளில் 1800 தனி நபர்கள் உள்பட 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது

அருண் துமல் கூறும் போது கடந்த ஐபிஎல் உடன் ஒப்பிடும்போது வாரியம் கிட்டத்தட்ட 35 சதவீத செலவைக் குறைக்க முடிந்தது. நாங்கள் ரூ .4,000 கோடி சம்பாதித்தோம். எங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் சுமார் 25 சதவீதம் உயர்ந்து உள்ளனர் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு
அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார்.
2. ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்... சுவராசியமான சம்பவங்களும்...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனாலும் பரப்பரப்புக்கு பஞ்சமில்லாமல் பல சுவராசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன
3. அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
4. சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள்
இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடு சர்ச்சயை எழுப்புகிறது ;இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
5. நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர், பும்ராவுக்கு அக்தர் பாராட்டு
நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.