கிரிக்கெட்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் லாரா கருத்து + "||" + Laura is of the opinion that Suryakumar Yadav should be included in the Indian squad for the Australian series

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் லாரா கருத்து

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் லாரா கருத்து
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 4 அரைசதங்களுடன் 480 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
புதுடெல்லி, 

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 4 அரைசதங்களுடன் 480 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் அவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது மனதளவில் வேதனையை ஏற்படுத்தியது என்று அவரே வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘சூர்யகுமார் யாதவ் தரமான வீரர். ரன் குவிப்பதை வைத்து வீரர்களை நான் பார்க்க மாட் டேன். அவர்களது ஆட்ட நுணுக்கம், நெருக்கடியான தருணத்தை கையாளும் விதம், எந்த நிலையில் விளையாடுகிறார் என்பதை வைத்து தான் பார்ப்பேன். சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அருமையான ஆட்டத்தை அளித்தார். ரோகித் சர்மா, குயின்டான் டி காக்குக்கு அடுத்தபடியாக அவர் நெருக்கடியான நிலையில் களம் இறங்குகிறார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து விட்டு பார்த்தால் எந்தவொரு அணியிலும் 3-வது வீரராக களம் இறங்குபவர் தான் சிறந்த வீரராக வும், அதிக நம்பிக்கைக்குரிய வீரராகவும் இருப்பார். என்னை பொறுத்தமட்டில் அவர் மும்பை அணிக்கு அது போன்ற சிறந்த வீரராக தான் இருந்து இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடருக் கான இந்திய அணியை பார்க்கையில் அவர் அதில் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர் ஏன் தேர்வாகவில்லை என்பது எனக்கு தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை மாநகராட்சியில் காவி கொடியை அகற்ற நினைப்பவர்களின் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் சிவசேனா கருத்து
மும்பை மாநகராட்சியில் காவி கொடியை அகற்ற நினைப்பவர்களின் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் என சிவசேனா கூறியுள்ளது.
2. ‘சென்னை அணியில் இருந்து டோனியை விடுவிக்க வேண்டும்’ முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யோசனை
‘ஐ.பி.எல். ஏலத்திற்கு முன்பாக சென்னை அணியில் இருந்து டோனியை விடுவித்தால் அந்த அணிக்கு நல்லது’ என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யோசனை தெரிவித்துள்ளார்.
3. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கம் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் சித்தராமையா கருத்து
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறுவது வழக்கம், அதனால் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
4. தேசியவாத காங்கிரசில் சேரும் ஏக்நாத் கட்சே: அஸ்திவார கற்கள் வெளியேறுவது குறித்து பா.ஜனதா சிந்திக்க வேண்டும்
அஸ்திவார கற்கள் வெளியேறுவது குறித்து பா.ஜனதா சிந்திக்க வேண்டும் என்று ஏக்நாத் கட்சே அக்கட்சியில் இருந்து விலகியது பற்றி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்தார்.
5. மந்திரிக்கு எதிராக அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் கைது புனேயில் சிக்கினார்
உள்துறை மந்திரிக்கு எதிராக அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் போலீசில் சிக்கினார்.