தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து
x
தினத்தந்தி 2 Dec 2020 2:18 AM GMT (Updated: 2 Dec 2020 2:18 AM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

கேப்டவுன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் விளையாடியது.  முதல் இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேன்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக வாண்டெர் டூசன் 32 பந்துகளில் 74- ரன்கள் எடுத்தார். டுபிளஸிஸ் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 192-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய  இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக டேவிட் மலன் 47- பந்துகளில் 99 ரன்கள் விளாசித்தள்ளினார். 17.4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 4 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது. 


Next Story