கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு 303- ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா + "||" + Pandya-Jadeja counterattack gives India 302

ஆஸ்திரேலிய அணிக்கு 303- ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு 303- ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
ஆஸ்திரேலிய அணிக்கு 303-ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0 2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங்  செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி  5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63  ரன்கள், ஜடேஜா 66- ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 76- பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதையடுத்து 303-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம்
இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன.
2. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் தப்பிக்க இங்கிலாந்தில் தஞ்சம் கேட்கிறாரா, விஜய் மல்லையா?
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் தப்பிக்க இங்கிலாந்தில் விஜய் மல்லையா தஞ்சம் கோர முயற்சிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் - ராணுவ அமைப்பின் தலைவர் தகவல்
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.
4. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - கடைசி நாளில் முடிவு கிடைக்குமா?
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. கடைசி நாளில் முடிவு கிடைக்குமா? அல்லது டிராவில் முடியுமா? என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
5. கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு நேபாள அரசு ஒப்புதல்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.