கிரிக்கெட்

ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் - காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஜடேஜா விலகல் + "||" + T20 series against Australia - Indian batsman Jadeja withdraws due to injury

ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் - காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஜடேஜா விலகல்

ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் - காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஜடேஜா விலகல்
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கான்பெர்ராவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணியின் ஜடேஜா காயம் அடைந்தார். முதலில் ஹாம்ஸ்டிரிங் காயம் அடைந்தார். அதன்பின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டை தாக்கி கன்கசன் ஆனார்.

இந்த நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.