ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: கே.எல் ராகுல், விராட் கோலி முன்னேற்றம்


ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: கே.எல் ராகுல், விராட் கோலி முன்னேற்றம்
x
தினத்தந்தி 9 Dec 2020 10:36 AM GMT (Updated: 9 Dec 2020 10:50 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி 134 ரன்களை அடித்துள்ளார்.

துபாய்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட  20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி, துவக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் 
ஆகியோர்  ஐசிசியின் 20 ஓவர் போட்டிகளின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில்  முன்னேற்றம் கண்டுள்ளனர். 

816 புள்ளிகளுடன் கே.எல் ராகுல் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 697 புள்ளிகளுடன் விராட் கோலி 9 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் உள்ளார். 2-ஆம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார். 


Next Story