கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: சென்னை உள்பட 6 இடங்களில் நடக்கிறது + "||" + Syed Mushtaq Ali 20 over cricket Including Chennai Going on in 6 places

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: சென்னை உள்பட 6 இடங்களில் நடக்கிறது

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: சென்னை உள்பட 6 இடங்களில் நடக்கிறது
38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
மும்பை, 

கலந்து கொள்ளும் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 5 ‘எலைட்’ பிரிவிலும் தலா 6 அணிகள் இடம் பிடித்துள்ளன. தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ‘பிளேட்’ பிரிவில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பிளேட்’ பிரிவின் லீக் ஆட்டங்கள் சென்னையில் நடக்கிறது. ‘எலைட்’ பிரிவு லீக் ஆட்டங்கள் பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய இடங்களில் நடக்கிறது. இதன் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத்தில் ஜனவரி 20-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு லீக் சுற்றுக்கு முன்பாக 3 முறையும், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னதாக 2 முறையும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. ஜனவரி 2-ந் தேதிக்குள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு அனைத்து அணியினரும் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா பரவலுக்கு பிறகு நடைபெறும் முதலாவது உள்ளூர் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: தமிழக அணி 4-வது வெற்றி
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
2. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: டெல்லி அணி 2-வது வெற்றி
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஆந்திராவை வீழ்த்தி, டெல்லி அணி 2-வது வெற்றியை பெற்றது.
3. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: மும்பை அணியில் தெண்டுல்கர் மகனுக்கு இடம்
சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.