கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 11 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா , முதல் இன்னிங்சில் 244 ரன்கள் + "||" + IND vs AUS Score: Aus bowl out India for 244

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 11 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா , முதல் இன்னிங்சில் 244 ரன்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 11 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா , முதல் இன்னிங்சில் 244 ரன்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, 11 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்கள் சேர்த்தது.
அடிலெய்டு:

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்-இரவு போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகள் இழந்தது. அதன்பின்னர் 3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. புஜாரா 160 பந்தில் 43 ரன்களும், விராட் கோலி 180 பந்துகளில் 74 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, 11 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் தொடக்க  வீரர்களாக களமிறங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா;அது எப்படி நடந்தது என்று சொல்வது மிகவும் கடினம் -பிசிசிஐ தலைவர் கங்குலி
ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது தவறல்ல என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
2. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தி தாக்குதல் ; 4 பேர் கைது
பணத்துக்காக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தபட்டார். பின்னர் அவர் விடுவிக்கபட்டார் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. ஐபிஎல் முடிந்த பிறகு வீரர்களுக்காக தனி விமானம் இயக்க வேண்டும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின் வேண்டுகோள்
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானத்தில் ஆஸ்திரேலிய திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ் லின் அறிவுறுத்தியுள்ளார்.
4. இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க ஆஸ்திரேலியா முடிவு
இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்வது இன்று ஆஸ்திரேலியா முடிவு செய்கிறது.
5. பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது
பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.