கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து + "||" + 20 over cricket Defeated Pakistan New Zealand

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது.
ஆக்லாந்து, 

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 39 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த அந்த அணியை பொறுப்பு கேப்டன் ஷதப் கானும் (42 ரன்), பஹீம் அஷ்ரப்பும் (31 ரன்) கவுரவமான நிலைக்கு உயர்த்தினர். நியூசிலாந்து தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டபி 4 விக்கெட்டும், ஸ்காட் குஜ்ஜெலின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட் 57 ரன்னும், மார்க் சாப்மன் 34 ரன்னும் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.