கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இருந்து பாபர் அசாம் விலகல் + "||" + Against New Zealand From the first Test Babur Assam Dissociation

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இருந்து பாபர் அசாம் விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இருந்து பாபர் அசாம் விலகல்
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு நடக்கிறது.
நேப்பியர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு நடக்கிறது.

இதனை அடுத்து நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டி தொடர் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. பயிற்சி ஆட்டத்தின் போது கைவிரலில் காயம் அடைந்ததால் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து முழுமையாக விலகிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அணியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதேபோல் கைவிரல் காயத்தில் இருந்து மீளாத இமாம் உல்-ஹக்கும் இந்த போட்டியில் ஆடமாட்டார் என்று பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. துணை கேப்டன் முகமது ரிஸ்வான் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட இருக்கிறார். இந்த ஆண்டில் உள்ளூர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த 24 வயது பேட்ஸ்மேன் இம்ரான் பட் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.