கிரிக்கெட்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார், தமிழக வீரர் யோமகேஷ் + "||" + From cricket Farewell, Tamil Nadu player Yomakesh

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார், தமிழக வீரர் யோமகேஷ்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார், தமிழக வீரர் யோமகேஷ்
தமிழகத்தை சேர்ந்த சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய யோமகேஷ் 50 முதல் தர போட்டிகளில் ஆடி 108 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
சென்னை, 

2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய அவர் அந்த சீசனில் 11 ஆட்டங்களில் ஆடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2012-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். காயத்தால் அவதிப்பட்ட அவர் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 2017-ம் ஆண்டு தமிழக அணிக்கு திரும்பினார். அந்த ஆண்டில் நடந்த மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள் குவித்து தமிழக அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற உதவினார். 2006-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த அவர் இந்திய ‘ஏ’ அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். கடந்த ஆண்டில் (2019) நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். இந்த நிலையில் 33 வயதான யோமகேஷ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.