கிரிக்கெட்

கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி + "||" + 16 Yearsof Iconic Dhoni

கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி

கிரிக்கெட் உலகில்  16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 16 ஆண்டுகளானதையொட்டி #16YearsofIconicDhoni என்ற ஹேஸ்டேக் டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
ராஞ்சி

இந்திய அணிக்கு 3 வகை உலகக்கோப்பைகளையும் பெற்றுத் தந்த மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். இதனை, ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஒரு சர்வதேச போட்டியிலாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏக்கமுடன் காத்திருக்கும் ரசிகர்கள், தோனி சர்வதேச போட்டியில் அறிமுகமாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆவதை  #16YearsofIconicDhoni என்ற ஹேஸ்டேக் மூலம் டிவிட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். அதில், தோனி இந்திய அணிக்காக செய்த பங்களிப்புகளை பட்டியலிட்டு வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த மகேந்திரசிங் தோனி, ஜூனியர் கிரிக்கெட்டில் இருந்து பீகார் கிரிக்கெட் அணி, ஜார்க்கண்ட் கிரிக்கெட் அணி இந்தியா ஏ அணி மற்றும் அங்கிருந்து இந்திய அணிக்கு அவரது பயணம் வெறும் 5-6 ஆண்டுகளாக தொடர்ந்தது. 

2004ம் ஆண்டு டிசம்பர் 23, இதேநாளில் சிட்டகாங்கில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் களமிறங்கி சந்தித்த முதல் பந்திலேயே ரன் அவுட்  முறையில் வெளியேறினார். பின்னர், அதே ஆண்டில் விசாகப்பட்டினத்தில்   நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்து அனைவரது புருவத்தையும் உயரச்செய்தார். 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார்.

மகேந்திர சிங் தோனி 2008 ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அணியின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றுக்கொண்டபோது, அவருக்கு பல சவால்கள் இருந்தன. இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது மற்றும் எதிர்காலத்திற்காக ஒரு அணியை உருவாக்குவது போல. அந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு தோனி இந்திய அணிக்கு பல வரலாற்று தருணங்களை வழங்கினார். தோனியின் கேப்டன் தலைமையில் டீம் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தது.

இலங்கை அணிக்கு எதிராக அவர் குவித்த 183 ரன்கள், விக்கெட் கீப்பர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இன்றளவும் உள்ளது. 2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையையும் வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று சாதனை படைத்தது. உலகளவில் கிரிக்கெட்டின் மூன்று விதமான உயரிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார். 

தோனியின் சாதனைகள்

1 கிரிக்கெட் உலகக் கோப்பை (2011)
1 டி 20 உலகக் கோப்பை (2007)
1 சாம்பியன்ஸ் டிராபி (2013)
3 ஐபிஎல் தலைப்புகள் (2010, 2011, 2018)
2 சாம்பியன்ஸ் லீக் டி 20 பட்டங்கள் (2010, 2014)
10,773 ஒருநாள் ரன்கள் + 444 விக்கெட்டுகளுக்கு பின்னால்
4,876 டெஸ்ட் ரன்கள் + 294 விக்கெட்டுகளுக்கு பின்னால்
1,617 டி 20 இன்டர்நேஷனல் ரன்கள் + விக்கெட்டுகளுக்கு பின்னால் 91 பேர்

ஒருநாள் சர்வதேச போட்டி: மகேந்திர சிங் தோனி இந்தியாவுக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி  10773 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி50.57  இதில் 10 சதங்களும் 73 அரைசதங்களும் அடங்கும். இதன் போது, ​​அவரது சிறந்த ஸ்கோர் 183 ஆட்டமிழக்காமல் இருந்தது. தோனி ஒருநாள் போட்டிகளில் 1 விக்கெட்டையும், அவரது சிறந்த செயல்திறன் 14 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கொண்டுள்ளது.

டெஸ்ட் :   - மகேந்திர சிங் தோனி இந்தியாவுக்கான 90 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடு 4876 ரன்கள் எடுத்துள்ளார்  சராசரி 38.09   இதில் 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் அடங்கும். இந்த நேரத்தில், அவரது சிறந்த ஸ்கோர் 224 ரன்கள்.தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா;அது எப்படி நடந்தது என்று சொல்வது மிகவும் கடினம் -பிசிசிஐ தலைவர் கங்குலி
ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது தவறல்ல என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
2. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தி தாக்குதல் ; 4 பேர் கைது
பணத்துக்காக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தபட்டார். பின்னர் அவர் விடுவிக்கபட்டார் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது
பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.
4. இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன்? மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..?
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
5. சூதாட்டம்: ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்துவீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.