கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன் + "||" + Syed Mushtaq Ali 20 over cricket: Dinesh Karthik is the captain of the Tamil Nadu team

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்
38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணை கேப்டனாக விஜய் சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,

38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் லீக் ஆட்டங்கள் பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, மும்பை உள்பட 6 இடங்களில் நடக்கிறது. நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத்தில் ஜனவரி 20-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் தமிழக அணி எலைட் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவுக்கான லீக் ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கிரிக்கெட் அணியை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணை கேப்டனாக விஜய் சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி வருமாறு:-

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), பாபா அபராஜித், பாபா இந்த்ராஜித், எம்.ஷாருக்கான், சி.ஹரி நிஷாந்த், என்.ஜெகதீசன், கே.பி.அருண் கார்த்திக், பிரதோஷ் ரஞ்சன் பால், எம்.முகமது, சந்தீப் வாரியர், எம்.அஸ்வின், ஆர்.சாய்கிஷோர், எம்.சித்தார்த், அஸ்வின் கிறிஸ்ட், எல்.சூர்யபிரகாஷ், ஆர்.எஸ்.ஜெகநாத் சீனிவாஸ், ஆர்.சோனு யாதவ், ஜெ.கவுசிக், ஜி.பெரியசாமி.