கிரிக்கெட்

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; 2022 ஐ.பி.எல் போட்டியில் 10 அணிகள்- இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு ஒப்புதல் + "||" + BCCI AGM Live Updates : BCCI approves 10-team IPL from 2022; calls for cricket’s inclusion in 2028 Olympics

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; 2022 ஐ.பி.எல் போட்டியில் 10 அணிகள்- இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு ஒப்புதல்

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; 2022 ஐ.பி.எல் போட்டியில் 10 அணிகள்- இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு ஒப்புதல்
2022 ஐ.பி.எல் போட்டியில் விளையாட 10 அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு ஒப்புதல் அளித்து உள்ளது. விரைவில் 2 புதிய அணிகள் அறிவிக்கப்படும்
ஆமதாபாத்,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமாதாபாத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது  அதன் விவரம் வருமாறு:-

2022 ஆம் ஆண்டிலிருந்து, ஐபி எல் போட்டிகளில் 8 அணிகளுக்கு பதிலாக  10 அணிகள் சேர்க்கப்படும். இன்றைய கூட்டத்தில் மேலும் இரண்டு அணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2022 ஐபிஎல் லில் இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்படும்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமிருந்து சில விளக்கங்களைப் பெற்ற பின்னர் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில்,  20 ஓவர் போட்டி வடிவத்தில், கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான ஐ.சி.சி  முயற்சியை ஆதரிக்க வாரியம் முடிவு செய்து உள்ளது.

மேலும், கொரோனா தொற்றுநோயால் குறைக்கப்பட்ட உள்நாட்டு போட்டிகளில் அனைத்து முதல் தர வீரர்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருத்தமான இழப்பீடு வழங்கப்படும் .

கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மாவுக்கு பதிலாக வாரியத்தின் துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கபட்டார்.

ஐ.சி.சி வாரியத்தில் இயக்குநராக சவுரவ் கங்குலி தொடர்ந்து இருக்க ஆதரவாக பொதுக்குழு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக பங்கேற்க வாரிய செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யபட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த திட்டம்; செப்டம்பர் 18-ந்தேதி தொடக்கம்?
இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.