கிரிக்கெட்

இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + The first Test between Sri Lanka and South Africa starts today

இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.
செஞ்சூரியன்,

கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டு இலங்கை அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதே போன்று இந்த முறையும் சாதிக்கும் முனைப்புடன் அந்த அணி ஆயத்தமாகி வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இலங்கை அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

தென்ஆப்பிரிக்க அணி குயின்டான் டி காக் தலைமையில் களம் இறங்குகிறது. பாப் டு பிளிஸ்சிஸ், மார்க்ராம், டீன் எல்கர், வான்டெர் துஸ்சென் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் காயத்தால் காஜிசோ ரபடா இல்லாதது அந்த அணிக்கு கொஞ்சம் பின்னடைவாகும். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த செஞ்சூரியனில் இதற்கு முன்பு இலங்கையுடன் 4 டெஸ்டில் விளையாடி அனைத்திலும் தென்ஆப்பிரிக்க அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ராசி இந்த முறையும் தொடருமா? என்பதை பார்க்கலாம். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.