கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 195 ரன்களில் சுருண்டது; பும்ரா,அஸ்வின் அபார பந்து வீச்சு + "||" + 2nd Test against Australia: India add 36 runs for the loss of one wicket at the end of the first day's play

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 195 ரன்களில் சுருண்டது; பும்ரா,அஸ்வின் அபார பந்து வீச்சு

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 195 ரன்களில் சுருண்டது; பும்ரா,அஸ்வின் அபார பந்து வீச்சு
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 195ல் சுருண்டது;பும்ரா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.


மெல்போர்ன்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதன்படி, ஆஸ்திரேலியா அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அவரைத்தொடர்ந்து மேத்யூ வேட் 30 ரன்களும், ஸ்டிவன் சுமித் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 38 ரன்களும், மர்னஸ் 48 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவர்களைத்தொடர்ந்து கேமரான் கீரின் 12 ரன்களும், டிம் பெய்ன் 13 ரன்களும், ஸ்டார்க் 7 ரன்னும், நாதன் லியான் 20 ரன்களும், பேட் கம்மின்ஸ் 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 72.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது.  

இந்திய அணியின் கட்டு கோப்பான பந்துவீச்சால், 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களில் சுருண்டது.

 பும்ரா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ரன் ஏதுவும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக களமிறக்கிய புஜாரா, சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தங்களது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது.

பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 11 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வீரர்களான சுப்மன் கில் 28 ரன்களும் புஜாரா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 

ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்தி உள்ளார்

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
2. இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து திணறல்
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில், 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறி வருகிறது.