கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து வீரர்கள் டெய்லர், வில்லியம்சன் அரைசதம் + "||" + Test against Pakistan: New Zealand players Taylor, Williamson fifties

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து வீரர்கள் டெய்லர், வில்லியம்சன் அரைசதம்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து வீரர்கள் டெய்லர், வில்லியம்சன் அரைசதம்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் டெய்லர், வில்லியம்சன் அரைசதம் அடித்தனர்.
மவுன்ட் மாங்கானு,

பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் பொறுப்பு கேப்டன் முகமது ரிஸ்வான், நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 13 ரன்னுக்குள் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரின் விக்கெட்டையும் இழந்தது.

இதன் பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் ஜோடி சேர்ந்து அணியை சிக்கலில் இருந்து காப்பாற்றினர். ஒட்டுமொத்தத்தில் நியூசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர் (438 ஆட்டம்) என்ற பெருமையோடு மட்டையை சுழட்டிய டெய்லர் 70 ரன்களில் (151 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வில்லியம்சனும், ஹென்றி நிகோல்சும் கைகோர்த்து பொறுமையுடன் ஆடி கடைசி வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 18 மற்றும் 86 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த வில்லியம்சன் 23-வது சதத்தை நெருங்கினார். ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 87 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 94 ரன்களுடனும் (243 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிகோல்ஸ் 42 ரன்னுடனும் (100 பந்து, 4 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. தோகைமலை அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற டெய்லர் கிணற்றில் பிணமாக மீட்பு
தோகைமலை அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற டெய்லர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.