ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட்; 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா


ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட்; 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா
x
தினத்தந்தி 27 Dec 2020 2:40 AM GMT (Updated: 27 Dec 2020 2:40 AM GMT)

ஆஸ்திரேலியா உடனான இன்றைய டெஸ்ட் போட்டியின் இன்றைய 2வது நாளில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

மெல்போர்ன்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் புஜாரா 17 ரன்களில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து மீண்டும் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஷுப்மன் கில்(45 ரன்கள்) டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இன்றைய உணவு நேர இடைவேளையின் போது இந்திய அணி 41 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்தது. தற்போது கேப்டன் ரஜானே மற்றும் ஹனுமா விஹாரி பேட்டிங் செய்து வருகின்றனர். 

Next Story