கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 621 ரன்கள் குவிப்பு; ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார் பிளிஸ்சிஸ் + "||" + First Test against Sri Lanka: South Africa accumulate 621 runs; du Plessis missed a double century on one run

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 621 ரன்கள் குவிப்பு; ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார் பிளிஸ்சிஸ்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 621 ரன்கள் குவிப்பு; ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார் பிளிஸ்சிஸ்
தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 396 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. 

10-வது சதத்தை பூர்த்தி செய்த மூத்த வீரர் பாப் டு பிளிஸ்சிஸ் தனது முதலாவது இரட்டை சதத்தை நெருங்கி துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன்னில் நழுவ விட்டார். அவர் 199 ரன்களில் (276 பந்து, 24 பவுண்டரி) கேட்ச் ஆகிப்போனார். பவுமா (71 ரன்), கேஷவ் மகராஜ் (73 ரன்) அரைசதம் அடித்து வலுவான ஸ்கோருக்கு வித்திட்டனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 621 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 600 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் செஞ்சூரியன் மைதானத்தின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. அடுத்து 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிப்பு - இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவிப்பு
இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிக்கப்படுவதாக, இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2. சீன ராணுவ மந்திரி இலங்கையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன ராணுவ மந்திரி இலங்கை சென்றார்.
3. 2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்
2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
4. 54 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை தனது சுயரூபத்தை காட்டியுள்ளது - மீனவ அமைப்பு கருத்து
ஐ.நா. சபை தீர்மான விவகாரத்தால்தான் 54 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை அரசு தனது சுய ரூபத்தை காட்டியுள்ளது என மீனவ அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
5. இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்காததற்கு வைகோ கண்டனம்
ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.