பாகிஸ்தான் அணிக்கு 373 ரன்கள் இலக்கு; நியூசிலாந்து நிர்ணயித்தது


பாகிஸ்தான் அணிக்கு 373 ரன்கள் இலக்கு; நியூசிலாந்து நிர்ணயித்தது
x
தினத்தந்தி 29 Dec 2020 6:00 PM GMT (Updated: 29 Dec 2020 6:00 PM GMT)

பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 431 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 239 ரன்னில் ஆட்டம் இழந்தது. 192 ரன்கள் முன்னிலையுடன் 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் (53 ரன்), பிளன்டெல் (64 ரன்) அரைசதம் அடித்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 373 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. 

இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 302 ரன்கள் தேவைப்படுவதால் இந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக 2 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஒட்டுமொத்தத்தில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3-வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

Next Story